சில விளையாட்டுகள் மற்றும் சில நிரல்களை நாம் இயக்கமுடியும். இங்கு நான் எடுத்துக்கொண்டது dos application foxpro ஆகும்.
முதலில் டெர்மினலில்
sudo apt-get install dosbox என்று தட்டச்சு செய்து நிரலை நிறுவிக்கொள்ளவேண்டும். பின்னர் foxpro application எங்கு இருக்கிறதோ அதை அப்படியே காப்பி செய்து நம்முடைய home அடைவினுள் பேஸ்ட் செய்துவிடவேண்டும்.
டெர்மினலில் dosbox என்று கட்டளை கொடுத்தால்
பின்னர் fox அடைவை mount செய்யவேண்டும். மேலே உள்ள படத்தில்ல் z:\> என்று இருக்கும். அதில்
mount c /home/arulmozhi/fox என்று தட்டச்சு செய்தால் mount ஆகிவிடும்.இப்போது c: என்று தட்டச்சு செய்தால் C க்கு சென்றுவிடும்.
இப்போது dir/w என்ற கட்டளையை கொடுத்தால் வருவது,
c யில் சென்று fox என்று தட்டச்சு செய்தால் foxpro வேலை செய்ய துவங்கும்.
இப்போது ஒரு கோப்பினை திறக்கலாம்.
பின்னர் கோப்பிலிருந்து வெளியேறி quit கொடுத்து foxproவை விட்டு வெளியேறலாம்.
மேலும் இதில் பல விளையாட்டுகளையும் சேர்த்துக்கொள்ளலாம்.
No comments:
Post a Comment