கெர்னல் என்பது ஆப்ரேடிங் சிஸ்டத்தின் கருவாகும். மனிதனின் உயிர் போன்று, ஆபெரேடிங் சிஸ்டத்தின் மையக்குறு இது . அப்லிகேஷேன்களும், ஹர்டுவேர் நிலையில் செயல்படுத்தப்படும் தரவுகளுக்கும்(data) பாலாமாக செயல்படுத்தப்படுகின்றன. கணினியின் மூலவளங்களை(system's resources) மேலாண்மை செய்வது கெர்னல் தான்.
வேறு சொற்களில் சொல்வது என்றால், ஹார்டுவேர் மற்றும் சாப்ட்வேர் கம்போநேண்டுகளுக்கு (component) இடையான தொடர்பை கெர்னல் நிர்வகிக்கிறது. வடிவமைப்பு, செயலாக்கும்முறை ஆகியவற்றை பொறுத்து கெர்னல்கள்,மோனோலித்திக் கெர்னல், மைக்ரோ கெர்னல், எக்சோ கெர்னல், கைபிரிட் கெர்னல், நானோ கெர்னல் என பலவாறாகப் பகுக்கப்படுகின்றன.
மினிக்ஸ் என்பது மைக்ரோ கெர்னல் கட்டமைப்பைக் கொண்டது. லினக்ஸ் மோனோலித்திக் கேர்னல் அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டது. ஏற்கனவே மேலே கூறியவாறு கெர்னல் என்பது ஆப்ரேடிங் சிஸ்டத்தின் குவிமையமாகும். பயனர் தான் பயன்படுத்தும் புரோகிராம் என்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறோமோ அதை புராசசருக்கு(processor) தெரிவிப்பது கெர்னல் தான்.
கெர்னலும் அதன் மீது இயங்கும் புரோகிராம்களும் நாணயத்தின் இரு பக்கம் போன்றவை. இதில் எதாவது ஒன்று இல்லாவிட்டால் அது செல்லாக்காசுதான், லினஸ் டோர்வால்ட்ஸ் மற்றும் ரிச்சர்ட் ஸ்டால்மேன் இருவருக்கும் ஏற்பட்ட நிலை இதுபோன்று தான். லினஸ் கெர்னலை உருவாக்கி வைத்திருந்தார் அதன் மீது இயங்கும் நிரலை அவரிடம் இல்லை ஸ்டால்மேன் ப்ராஜெக்ட் மூலம் உருவாக்கினார். GNU மூலம் உருவாக்கிருந்த புரோகிராம்களும் லினஸ் உருவாக்கிருந்த கெர்னலும் இணைக்கப்பட்டதான் மூலம் லினக்ஸ் பிறந்தது.
லினக்ஸ் பற்றிய உங்கள் ஆக்கங்கள் அனைத்தும் அருமை வசந்தகுமார்.
ReplyDeleteரெட்ஹேட் (9) லினக்சில் Wine நிறுவுவது எப்படி என்று கொஞ்சம் விளக்க முடியுமா ?
நன்றி.
//வணக்கம் பா.வேல்முருகன் தங்கள் சந்தேகத்திற்கு பதில் அனுப்ப தவரியதிர்க்கு மன்னிக்கவும் ரெட்ஹட் 9 -இல் wine நிறுவ mrb கோப்பை தரவிறக்கம் செய்து நிறுவிக்கொள்ளலாம்.
ReplyDeleteஇதை பற்றி சரியாக தெரியவில்லை நான் உபுண்டு லினக்ஸ் தான் அதிகமாக பயன்படுத்துகிறேன் உபுண்டுவில் நிறுவ முதலில் முனையத்திற்கு சென்று sudo டைப் செய்து
என்டர் ( enter ) செய்தால் password கேக்கும் உங்கள் root password கொடுத்தல் root account க்கு சென்று விடும் அப்போது apt-get install wine டைப் செய்தால் நிறுவிவிடும்.
//