நம்முடைய சிஸ்டத்தின் திரை (விண்டோ) அழகாக இருக்கவேண்டும் என்று எல்லோரும் ஆசைபடுவோம் அதற்காக சிஸ்டத்தில் பல தீம்கலை இன்ஸ்டால் செய்து இதனால் சிஷ்டத்தின் வேகம் குரைய தொடங்கிறது இதனால் விண்டோசில் எந்த தீம்களும் இன்ஸ்டால் செய்யமுடியவில்லை ஆனால் உபுண்டு அப்படி இல்லை நம் மனதை கொள்ளை கொள்ளும் வடிவில் அழகாக அமைக்கலாம் இதற்கு எந்த ஒரு தீம் இன்ஸ்டால் செய்யவேண்டியதில்லை.
உபுண்டுக்குள் பல தீம் இருக்கின்றன மற்றும் நம் விருப்பத்தற்கு ஏற்றாற்போல் கர்சர், கலர், ஐகான், விண்டோ பார் முதலியவை மாற்றி அமைக்கலாம்.
முதலில் System---> Preferences---> Appearance கிளிக் செய்தால் appearance preferences என்ற விண்டோ ஓபன் ஆகும் அதில் நமக்கு பிடித்த தீம் தேர்வு செய்து close செய்தால் போதும் நமக்கு பிடித்த தீம் கிடைத்துவிடும்.
கர்சரை மாற்றியமைக்க வேண்டும் என்றால் customize என்ற பொத்தனை அழுத்தினால் customize theme என்ற விண்டோ ஓபன் ஆகும்,
அதில் pointer என்ற டேப் அழுத்தி நமக்கு பிடித்த கர்சர் செலக்ட் செய்து கொண்டு close செய்ய வேண்டும் இப்போது ஒரு அழகான மௌஸ் கர்சர்(pointer) கிடைத்துவிடும்.
icon என்ற டேப் அழுத்தி நமக்குபிடித்த icon செலக்ட்(select) செய்து close செய்தாள் நாம் வைத்திருக்கும் icon செலக்ட் செய்த icon ஆக மாறிவிடும்.
window border என்ற டேப் அழுத்தி நமக்கு பிடித்ததை செலக்ட் செய்து close செய்தாள் போதும்.
color மற்றும் control இவைபோல் தான் செலக்ட் செய்து close கொடுத்தல் நமக்கு பிடித்த கலர் மற்றும் கண்ரோல் இப்போது நமக்கு பிடித்தமாதிரி விண்டோ (திரை) கிடைக்கும்.
எனக்கு பிடித்த தீம், கர்சர் மற்றும் மேலே குரியவை போன்று நான் அமைத்துள்ளேன் பாருங்கள்.
No comments:
Post a Comment