உபுண்டு வில் நிறைய பக்கங்கள் ( Multi page ) கொண்ட pdf file ஐ எவ்வாறு image format க்கு மாற்றுவது என்று பாப்போம், முதலில் Terminal ஐ Open செய்து sudo apt-get install imagemagick என்று Type செய்து imagemagick என்ற மென்பொருள் ஐ install செய்து கொள்ளுங்கள். அதன் பிறகு pdf file எங்கு வைத்து இருக்கிர்களோ அந்த directory க்கு செல்லுங்கள் நான் pdf file ஐ Desktop இல் வைத்து இருக்கிறேன் அதன் படி நீங்க பாருங்கள் cd /home/username/Desktop/ கொடுத்து Desktop செல்லுங்கள் கீழே உள்ள படத்தை பாருங்கள்.
அதன் பிறகு convert உங்கள் pdf file name மற்றும் அதை image format க்கு மாற்றும் file name ஐ கொடுக்க வேண்டும், உதாரணமாக convert Document.pdf NewDoc.jpg என்று கொடுத்துள்ளேன் என்னுடைய pdf file name ஐ Document என்று கொடுத்துள்ளேன் அடுத்ததாக image file name ஐ NewDoc என்று கொடுத்துள்ளேன் கீழே உள்ள படத்தை பாருங்கள்.
அவ்வளவு தான் இப்போது pdf file ஐ image file format க்கு மாற்றிவிட்டோம் உங்கள் pdf file இல் உள்ள ஒவ்வொரு பக்கங்களும் ஒவ்வொரு image file ஆக மாறி இருக்கும் உங்கள் Desktop பார்த்தல் தெரியும், கீழே உள்ள படத்தை பாருங்கள்.
என்னுடைய pdf file ஆறு பக்கங்களை கொண்டது அதனால் ஆறு image file எனக்கு கிடைத்துள்ளது.
No comments:
Post a Comment