Sunday, May 2, 2010

விண்டோசின் ஆர்பாட்டம்

       என்ன கொடும சார் இது 
யார் யாரோடு போட்டி போடணும் என்று ஒரு வரைமுறை  இல்ல.


விண்டோஸ் :   டே மாப்பு என்கிட்ட வச்சிக்காத வச்சிக்கிட்டா  டாப்பு யெகிரிடும்.

லினக்ஸ் :    ஆமா இவர் பெரிய உலக அழகி ஐஸ்வரியாராய் இவர வசிக்கிறோம், டே கண்ணாடி தொடச்சிட்டு பாருடா.

விண்டோஸ் :   வயதில் மூத்தவன்  சொல்வதை கேட்டுக்க  தம்பி.


லினக்ஸ் :    ஆமா ஆமா .....

விண்டோஸ் :   ஹலோ என்ன !  என்ன பாத்தா காமடியா இருக்கா, என்ன நம்பிதான் இந்த உலகமே இருக்கு தெரிஞ்சிக்கோ என் மூலமாக தான் பல துறைகளில் பலர் பல சாதனைகள் செய்கின்றன.

லினக்ஸ் :     இந்த தலைகனத்தை அடக்க தான் நான் உருவாக்கி இருக்கேன்.
விண்டோஸ் :   நான் தான் எல்லா இடங்களிலும் பரவி இருக்கேன் என்னை பயன் படுத்தாதவர் யாவரும் இலர்.

லினக்ஸ் :   ஆமா ஆமா  " சிங்கம் சிங்களா வரும் பண்ணிங்க தான் கூட்டமா வரும் " அந்த விஷயத்தில் நி கரைட்டா இருக்க,  அதுக்குள்ள தப்பா நீ  சிங்கம் என்று எடை போட்டுடாத. உன்னை வாங்கவேண்டும் என்றால் கூட பல குட்டிகளும் சேர்த்து வாங்க வேண்டும் அல்லவா அதை சொன்னேன் (அதாவது Ms-office, Anti virus, speed up, Nero, etc..).    

விண்டோஸ் :   அப்பனா நீ சிங்கமா !

லினக்ஸ் :    நீ ரொம்ப லேட் பிக்கப்.  

விண்டோஸ் :   நீ நேத்து மொளைச்ச காளான் என்கிட்ட சவாலா.

லினக்ஸ் :   எப்ப மொளைச்சனும் முக்கியமில்லை உன்னவிட எப்போதும் சுருசுருப்பா இருக்க என்று  மட்டும் பார்.

விண்டோஸ் :   உன் முடிவை யாரால் மாற்ற முடியும்.
லினக்ஸ் :    ஐயோ ராமா.... இவனளுக்கு விளக்கம் சொல்லியே எனக்கு வயதாயிடும் போல இருக்கு.

விண்டோஸ் :   ஐயோ சாமி என்ன விட்டுவிடு உன்கிட்ட போட்டி போட்டு என்னால் ஜெயிக்க  முடியாது...  

No comments:

Post a Comment