Friday, February 17, 2012

உபுண்டு வில் நிறைய பக்கங்கள்(Multi page) கொண்ட pdf file ஐ image format க்கு மாற்றுவது.

உபுண்டு வில் நிறைய பக்கங்கள் ( Multi page ) கொண்ட pdf file ஐ எவ்வாறு image format க்கு மாற்றுவது என்று பாப்போம், முதலில் Terminal ஐ Open செய்து sudo apt-get install imagemagick என்று Type செய்து imagemagick என்ற மென்பொருள் ஐ install செய்து கொள்ளுங்கள். அதன் பிறகு pdf file எங்கு வைத்து இருக்கிர்களோ அந்த directory க்கு செல்லுங்கள் நான் pdf file ஐ Desktop இல் வைத்து இருக்கிறேன் அதன் படி நீங்க பாருங்கள்  cd /home/username/Desktop/  கொடுத்து Desktop செல்லுங்கள் கீழே உள்ள படத்தை பாருங்கள்.


 அதன் பிறகு convert உங்கள் pdf file name மற்றும் அதை image format க்கு மாற்றும் file name ஐ கொடுக்க வேண்டும், உதாரணமாக convert Document.pdf NewDoc.jpg என்று கொடுத்துள்ளேன் என்னுடைய pdf file name ஐ Document என்று கொடுத்துள்ளேன் அடுத்ததாக image file name ஐ NewDoc என்று கொடுத்துள்ளேன் கீழே உள்ள படத்தை பாருங்கள்.


 அவ்வளவு தான் இப்போது pdf file ஐ image file format க்கு மாற்றிவிட்டோம் உங்கள் pdf file இல் உள்ள ஒவ்வொரு பக்கங்களும் ஒவ்வொரு image file ஆக மாறி இருக்கும் உங்கள் Desktop பார்த்தல் தெரியும், கீழே உள்ள படத்தை பாருங்கள்.


என்னுடைய pdf file ஆறு பக்கங்களை கொண்டது அதனால் ஆறு image file எனக்கு கிடைத்துள்ளது.

Wednesday, February 1, 2012

உபுண்டு வில் Adobe Reader 9 மென்பொருளினால் ONLINE READER PDF file ஐ download செய்ய முடியாது நிலையில் அந்த PDF file ஐ எவ்வாறு download செய்வது.

 உபுண்டு வில் Adobe Reader 9 மென்பொருளினால் ONLINE READER PDF file ஐ download செய்ய முடியாது நிலையில் அந்த PDF file ஐ எவ்வாறு download செய்வது என்று பாப்போம், நாம் பொதுவாக இணையத்தில் ஒரு தகவலை தேடி செல்வோம் அவை pdf file ஆக இருக்கும் அதை open செய்தால் (கீழே உள்ள படத்தை பாருங்கள்) ONLINE READER PDF file வடிவில் இருக்கும்.


அதை save செய்ய முயற்சிப்போம் அப்போது கணினி LogOut ஆகி வரும் இதனால் நமது நேரம் வீனாகுவதொடு அந்த file உம் Download செய்ய முடியாது அந்த நிலையில் அந்த file ஐ download செய்ய. URL link ஓரத்தில் அந்த website இன் icon இருக்கும் அதை click செய்தால் more information என்று வரும் கீழே உள்ள படத்தை பாருங்கள்.


அந்த more information ஐ click செய்தால் page information என்று window ஒன்று open ஆகும். அதில் General, Media, permissions மற்றும் Security இருக்கும் கீழே உள்ள படத்தை பாருங்கள்.


அவற்றில் Media வை click செய்தால் அந்த pdf file Location, Type, Size, Dimensions இருக்கும் அந்த window வில் Save As என்ற Button இருக்கும்.

   

Save Button ஐ click செய்தால் எந்த இடத்தில் அந்த file, Download or Save ஆக வேண்டும் இடத்தை கொடுத்தால் அந்த file download ஆகி விடும் கீழே உள்ள படத்தை பாருங்கள். 

 

இப்போது நாம் விரும்பும் pdf file ஐ download செய்து கொள்ளலாம்.