Sunday, April 18, 2010

உபுண்டுவின் கமாண்டு தொகுப்பு .1

                                      LSB_release -a
என்ற கமாண்டு மூலம் லினக்ஸ் டிஸ்கிரிப்ட்சன் ( Description ) , டிஸ்ட்ரீபியுட்டர் ஐடி ( Distributor ID) , ரிலிஸ் ( Release ) மற்றும் கோடுநேம் (Code Name) தெரிந்து கொள்ள இந்த கமாண்டு உதவுகிறது.கிழே உள்ள படத்தை பாருங்கள்.




                                             ifconfig 

என்ற கமாண்டு மூலம் கணினியின் இணைய தகவலை ( system network information ) தெரிந்து கொள்ளலாம், கிழே உள்ள படத்தை பாருங்கள்.




                                         LS -sh

   என்ற கமாண்டு மூலம் நம்முடைய கோப்பின் அளவை காணலாம், கிழே உள்ள படத்தை பாருங்கள். 



                                       man -h 

 இந்த  கமாண்டு  மூலம் நமக்கு பல உதவி கமாண்டு கிடைக்கும், கிழே உள்ள படத்தை பாருங்கள். 


கி போர்டில் q அழுத்தினால் ( press ) வெளியேரும்  ( exit ஆகும் ).
        

                                 man intro

மேன் (man-manula) லினக்ஸ்யின் அனைத்து மென்பொருள்களும் மற்றும் பயனுள்ள தகவல்களும் கிடைக்கும் பாருங்கள் கிழே உள்ள படத்தை பாருங்கள்.


 கி போர்டில்  q அழுத்தினால் அதைவிட்டு வெளியேரும்  ( exit ஆகும் ).









ஆறாம் ஜ ன ரே ஷ னி ன் ஓபன் சோர்ஸ் நிலை.

மிஸ்ட்ரி (mistry) என்பவர் தனது 28 -வது வயதில் மச்சசுசெட்ஸ்  இன்ஸ்டியுட் ஆப் டெக்னாலஜி மீடியா லேப்  (massachusetts institute of technology's media lab)-இல் என்ற ஆராய்ச்சி மையதில் ஆறாம் ஜனரே ஷனின்(sixth sense) டெக்னாலஜி மீடியா பற்றி ஆராய்ந்தார்.



இவர் மைசூரில் நவம்பர் 8 TED india கலந்துரையாடலில் இதை பற்றி விளக்கம் தந்தார் இதனால் ஆறாம் ஜ ன ரே ஷ ன க் கு ஒரு பெரிய மதிப்பு கிடைத்ததாகவும் தெரிவித்தனர்.மேலும் ஒன்று கூறினார் இதை ஓபன் சோர்ஸ் ப்ராஜெக்ட் (project) முலமாக கண்டுபிடித்ததால் இதை ஓபன்சோர்ஸ் ஆக வேலிடயிப் போகதாகவும் ஆரிவித்தார்.

இவை ஒரு டிஜிட்டல் இன்பர்மேசன்(digital information)  இவை எப்படி இருக்கும் என்றால் நம் கழுத்தின் சேயினின் டாலர் தொங்குவதுபோல் இருக்கும். இவை கைபேசி கணினி டிவைஸ் (mobile computing device) மூலம் உருவாக்கியுள்ளனர், இவர் கழுத்தில் projector,camera,mirror போன்றவை டாலராக தொங்கும்,மேலே உள்ள படத்தை பாருங்கள். இதனால் இவை எங்கு வேண்டுமாலும் எளிதாக எடுத்து செல்லலாம்,




இவற்றின் மூலம் prowsing,call,games போன்ற செயல்பாடு எளிதாக இருக்கும் நேரத்தை சேமிக்கலாம், முன்பு ஆரிவித்ததுபோல் இவை டிஜிட்டல் இன்பர்மேசன் என்பதால்  நாம் பயன்படுத்தும் எல்லாம் ஆப்ஜெக்ட் -ஆக இருப்பதால் அதாவது பேப்பர்,ஆட்டை,சுவர் மற்றும் நம் கை (hand)  போன்றவை எல்லாம் நம்மை சுற்றி யுல்லவை வைத்து  நாம்  விசுவல் ஆக பார்க்கலாம்.


இப்பொது உதாரணமாக,
                                     மிர்ரர்(mirror) -இன் வெளிச்சம் சுவரில் படும் ( சுவர் மற்றும் என்பதில்லை தற்காலிகமாக நம் இடத்தில் எவை உள்ளதோ அதை வைத்து பயன்படுத்தலாம் அவை  முக்கியமாக தடுப்பானாக இருக்கவேண்டும் உதாரணமாக, பேப்பர், அட்டை ) அப்போது நாம் எந்தசெயல் செய்யபோரோமோ அதற்க்கு தகுந்தவாறு விர அசைக்கவும் இப்பொது நம் செயல்பாட்டை கமிராவில் பதிவாகும் பின்பு அவை  (திரையில்) சுவற்றில் பார்க்கலாம்( விசுவலாக தெரியும் ).

     நாம் ஒவ்ஒரு விரல் ஆசைக்கும் போது அதற்க்கு தகுந்தமாதிரி செயல்படும். இதில் ஒரு மென்பொருள் சேர்த்து உள்ளனர் நாம் விரல் அசைக்கும் போது கேமிர பிடிக்கும் அதற்கு தகுந்தமாதிரி விசுவல் நமக்கு திரையில் தெரியும். மேலே உள்ள படத்தை பாருக்கள்.                                      

Monday, April 5, 2010

கெர்னல் என்பது என்ன.

கெர்னல் என்பது ஆப்ரேடிங் சிஸ்டத்தின் கருவாகும். மனிதனின் உயிர் போன்று, ஆபெரேடிங் சிஸ்டத்தின் மையக்குறு இது . அப்லிகேஷேன்களும், ஹர்டுவேர் நிலையில் செயல்படுத்தப்படும்  தரவுகளுக்கும்(data) பாலாமாக செயல்படுத்தப்படுகின்றன. கணினியின் மூலவளங்களை(system's resources)  மேலாண்மை செய்வது கெர்னல் தான்.



வேறு சொற்களில் சொல்வது என்றால், ஹார்டுவேர் மற்றும் சாப்ட்வேர் கம்போநேண்டுகளுக்கு (component)  இடையான தொடர்பை கெர்னல் நிர்வகிக்கிறது. வடிவமைப்பு, செயலாக்கும்முறை ஆகியவற்றை பொறுத்து கெர்னல்கள்,மோனோலித்திக் கெர்னல், மைக்ரோ கெர்னல், எக்சோ கெர்னல், கைபிரிட் கெர்னல், நானோ கெர்னல்  என பலவாறாகப் பகுக்கப்படுகின்றன.

மினிக்ஸ் என்பது மைக்ரோ கெர்னல் கட்டமைப்பைக் கொண்டது. லினக்ஸ் மோனோலித்திக் கேர்னல் அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டது. ஏற்கனவே மேலே கூறியவாறு  கெர்னல் என்பது ஆப்ரேடிங் சிஸ்டத்தின் குவிமையமாகும். பயனர் தான் பயன்படுத்தும் புரோகிராம் என்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறோமோ அதை புராசசருக்கு(processor) தெரிவிப்பது கெர்னல் தான்.        
 
கெர்னலும்  அதன் மீது இயங்கும் புரோகிராம்களும் நாணயத்தின் இரு பக்கம் போன்றவை. இதில் எதாவது ஒன்று இல்லாவிட்டால் அது செல்லாக்காசுதான், லினஸ் டோர்வால்ட்ஸ் மற்றும் ரிச்சர்ட் ஸ்டால்மேன் இருவருக்கும் ஏற்பட்ட நிலை இதுபோன்று  தான். லினஸ் கெர்னலை உருவாக்கி வைத்திருந்தார் அதன் மீது இயங்கும் நிரலை அவரிடம் இல்லை ஸ்டால்மேன்  ப்ராஜெக்ட் மூலம் உருவாக்கினார். GNU மூலம் உருவாக்கிருந்த புரோகிராம்களும் லினஸ் உருவாக்கிருந்த கெர்னலும் இணைக்கப்பட்டதான் மூலம் லினக்ஸ் பிறந்தது.